தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களுக்கு தீபாவளித் திருநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், "தீபங்களின் ஒளி வெள்ளத்தில் காரிருள் விலகி, நல் விடியல் பிறக்கட்டும், அனைவரது இல்லங்களிலும், உள்ளங்களிலும் அன்பு, அமைதி, செல்வம் நிலைத்து நீடித்திருக்கட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜையையொட்டி, தவெக கட்சி அலுவலகத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப் படத்திற்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த புகைப்படங்களை அவர் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துமுள்ளார்.