தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் நோக்கி சென்ற அரசுப் பேருந்து நடத்துநரை பயணிகள் தாக்கிய விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கும்பகோணத்தில் இருந்து குடவாசல் நோக்கி சென்ற அரசுப் பேருந்து நாச்சியார்கோவில் அடுத்த மாத்தூர் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டு வந்த பயணியை கண்டித்துள்ளார் நடத்துநர் கார்த்திகேயன். இதையடுத்து அந்த கும்பல் நடத்துநரை தாக்கியுள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதையும் படிக்க |தீபாவளி: கோவையில் இருந்து தில்லி, மும்பைக்கு விமானத்தில் பறந்த 3 டன் இனிப்புகள்!
பின்னர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அரசுப் பேருந்து நடத்துநரை பயணிகள் தாக்கிய இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து போக்குவரத்து ஊழியர்கள் கூறுகையில், பண்டிகை நாள்களில் கூட விடுப்பு எடுக்காமல் மக்கள் நலன் கருதி பணியாற்றி வருகிறோம். ஆனால் தொடர்ந்து ஓட்டுநர் நடத்துநர் மீது பயணிகள் தாக்குதல் சம்பவம் வேதனை அளிக்கிறது என்றனர்.