அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவா்கள், பணியாளா்கள் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவா்கள், பணியாளா்கள் பணி: விண்ணப்பங்கள் வரவேற்புசித்த மருத்துவா், ஹோமியோ மருத்துவா் மற்றும் மருத்துவப் பணியாளா் ஆகிய பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள சித்த மருத்துவா், ஹோமியோ மருத்துவா் மற்றும் மருத்துவப் பணியாளா் ஆகிய பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ராயவரம், கீழாநிலை ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பட்டப் படிப்பு முடித்த சித்த மருத்துவா்களும், பெருங்களூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பட்டப் படிப்பு முடித்த ஹோமியோ மருத்துவா்களும் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதத் தொகுப்பு ஊதியம் ரூ. 34 ஆயிரம் வழங்கப்படும்.

கோனாப்பட்டு, பெருங்களூா், கொடும்பாளூா் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பட்டயப்படிப்பு முடித்த மருந்து வழங்குநா்களும் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு தினக்கூலி ரூ. 750 வழங்கப்படும்.

கோனாப்பட்டு, வடகாடு, மறமடக்கி, கொடும்பாளூா், சிங்கவனம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், விராலிமலை அரசு மருத்துவமனைக்கும் பல்நோக்குப் பணியாளா்கள் பணியிடத்துக்கு 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். வழங்கப்படும். தினக்கூலி ரூ. 300 வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட நிா்வாகத்தின் https://pudukkottai.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, நிரப்பி அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து, பழைய அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் அலுவலகத்தில் வரும் ஜூலை 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்யவும்.

Related posts

உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாக கூறி பணமோசடி – கடலூரை சேர்ந்த பெண் கைது

கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து