அரசு நிகழ்வுகளில் பங்கேற்கும்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலாச்சார உடை அணிய கோரி வழக்கு

அரசு நிகழ்வுகளில் பங்கேற்கும்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலாச்சார உடை அணிய கோரி வழக்கு

சென்னை: தமிழக துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின், அரசு நிகழ்வுகளில் பங்கேற்கும்போது தமிழ் பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் முறையான உடை அணிய உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை சேலையூரை சேர்ந்த வழக்கறிஞர் எம்.சத்யகுமார் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திமுக உறுப்பினரான எனது தாத்தா சுந்தரராம ரெட்டியார், முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். விவசாயிகள் சங்க தலைவராகவும் இருந்தார்.

கடந்த 1967-ம் ஆண்டு திமுக முதன்முறையாக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தபோது, முதல்வராக இருந்த அண்ணாதுரையும், அதன்பிறகு முதல்வராக இருந்தகருணாநிதி, ஸ்டாலின் போன்றோரும் தமிழ் மொழி மற்றும் தமிழகத்தின் பெருமை, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உடை அணிந்தனர். அதை தொண்டர்களும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆனால், தற்போது தமிழகத்தின் துணை முதல்வராக பதவிவகிக்கும் உதயநிதி ஸ்டாலின், அரசு நிகழ்வுகளில் பங்கேற்கும் போது கட்சியின் சின்னம் பொறித்தடி-சர்ட், ஜீன்ஸ் பேன்ட் மற்றும் முறையற்ற காலணிகள் அணி வதை வழக்கமாக கொண்டுள்ளார். இது, ஒரு துணை முதல்வர் அரசு நிகழ்வுகளில் பங்கேற்கும் போது அணிய வேண்டிய ஆடை விதிமுறைகளுக்கு எதிரானது.

முதல்வராக, அமைச்சர்களாக பதவி வகிப்பவர்கள் எவ்வகையான உடைகளை அணிய வேண்டும் என்பது குறித்து கட்டுப்பாடுகளை விதித்து 2019-ம் ஆண்டு அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, துணை முதல்வராக உள்ள உதயநிதி ஸ்டாலின், அரசு நிகழ்வுகளில் பங்கேற்கும்போது தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் முறையான உடை அணிய வேண்டும் என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசார ணைக்கு வரவுள்ளது.

Related posts

“சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் சமூக வலைதள வதந்திகள் பெரும் சவால்” – முதல்வர் ஸ்டாலின்

ஜப்பான் ஆளுங்கட்சி தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு