அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜுலை 12 வரை நீதிமன்ற காவல் – நீதிமன்றம் அதிரடி

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜுலை 12ம் தேதி வரை நீதிமன்ற காவல் – உயர்நீதிமன்றம் அதிரடி

அரவிந்த் கெஜ்ரிவால்

மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஜூலை 12 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை மாற்றப்பட்ட வழக்கில் பணம் கைமாறியதாக அமலாக்கத்துறையும் சிபிஐயும் வழக்குகள் பதிவு செய்தன. இந்த வழக்கில் ஏற்கெனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அண்மையில் அவரை இதே வழக்கில் கைது செய்த சிபிஐ அதிகாரிகள் சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இந்த சூழலில் சிபிஐ விசாரணைக்காக டெல்லி நீதிமன்றம் 3 நாட்கள் அவகசாம் அளித்திருந்தது

விளம்பரம்

இதையும் படிங்க:
குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் – OMR நகலை வெளியிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை

3 நாட்கள் விசாரணை முடிந்த பின்னர் டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ தரப்பில் காவல் நீட்டிப்பு கோரப்பட்டது. இதையடுத்து ஜூலை 12 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Arvind Kejriwal
,
delhi

Related posts

திருப்பதி லட்டு விவகாரம்; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய முடிவு

சந்திரபாபு நாயுடு கடவுளிடமே அரசியல் செய்கிறார் – ரோஜா

‘கோவில்களின் நிர்வாகம் பக்தியுள்ள இந்துக்களிடம் இருக்க வேண்டும்’ – சத்குரு ஜக்கி வாசுதேவ்