அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையின் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அவர் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி, நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் பிரிவு 19-ன் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததன் மூலம் கெஜ்ரிவாலை கைது செய்ததில் அமலாக்கத்துறை தவறு செய்ததாக குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த மே மாதம் முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டு இருக்கிறது. ஏற்கனவே சிபிஐயும் மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலை கைது செய்து இருப்பதால், அவர் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை உள்ளது.

Related posts

கோடியக்கரை அருகே கடலில் தவறி விழுந்த தரங்கம்பாடி மீனவர் மாயம்

“நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதா?” – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம் 

நடிகர் விஜய்யை அதிமுகவினர் யாரும் விமர்சிக்க வேண்டாம்: நிர்வாகிகளுக்கு பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல்