அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீடு செல்லும்.. உச்சநீதிமன்றம் அதிரடி

அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீடு செல்லும்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

உச்ச நீதிமன்றம்

அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான உள்ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டில் 2009 ஆம் ஆண்டு திமுக அரசு அருந்ததியினருக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்த வழக்கிலும், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் இட ஒதுக்கீடு வழக்கிலும் ஏழு நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி சந்திர சூடு தலைமையிலான ஏழு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது.

விளம்பரம்

அரசியல் சாசனத்தின் 14 ஆவது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை என்றும் பட்டியலின உள்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் கூறினர். இதனால் உள் ஒதுக்கீடு வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், பட்டியல் இனத்தவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதில் எந்த ஒரு தடையும் கிடையாது என தீர்ப்பளித்தது.

அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டமும் செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் ஆறு நீதிபதிகள் இந்த ஒருமித்த தீர்ப்பு அளித்தனர். நீதிபதி பெலா திரிவேதி மட்டும் மாறுபட்ட கருத்து தெரிவித்தார்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Against SC verdict
,
Supreme court judgement

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்