அரையிறுதிக்கு தகுதி பெற்ற பிறகு ரஷித் கான் பேசியது என்ன?

அரையிறுதிக்கு தகுதி பெற்ற பிறகு ரஷித் கான் பேசியது என்ன? டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியது குறித்து அந்த அணியின் கேப்டன் ரஷித் கான் பேசியுள்ளார்.ரஷித் கான்படம் | AP

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியது குறித்து அந்த அணியின் கேப்டன் ரஷித் கான் பேசியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றில் வங்கதேசத்தை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 114 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய வங்கதேசம் ரஷித் கான் மற்றும் நவீன் உல் ஹக்கின் அபார பந்துவீச்சில் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது ஆப்கானிஸ்தான் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் என அந்த அணியின் கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது மிகப் பெரிய விஷயம். முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது ஆப்கானிஸ்தான் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும். 19-வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் நாங்கள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளோம். ஆனால், தற்போது முதல் முறையாக இந்த நிலையை அடைந்துள்ளோம். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில்தான் முதல் முறையாக சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதி பெற்றோம்.

உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் நாங்கள் விளையாடிய விதம், கண்டிப்பாக இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள் என்பதைக் காட்டுவதாக நினைக்கிறேன். ஆப்கானிஸ்தான் வீரர்கள் அனைவரும் அணியின் வெற்றிக்காக தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். என்னுடைய உணர்வுகளை எவ்வாறு வெளிப்படுத்துவது எனத் தெரியவில்லை. இது மிகப் பெரிய சாதனை. என்னைப் பொறுத்தவரை, எந்த ஒரு அணியும் இது நல்ல அணி, இது மோசமான அணி என்பதெல்லாம் கிடையாது. அனைத்து அணிகளும் சமமானதே என்றார்.

Related posts

இந்தியா-ஜப்பானின் வலிமையான உறவுகள், உலகளாவிய வளத்திற்கு சிறந்தவை: பிரதமர் மோடி

அரசியலுக்கு பணம் சம்பாதிக்க வரவில்லை: கெஜ்ரிவால் பேச்சு

திருப்பதி லட்டு விவகாரத்திற்காக பரிகாரம் – 11 நாட்கள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்