அலபாமாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி!

ஐக்கிய அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ள நகரமான அலபாமாவின் பர்மிங்காமில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், இந்தச் சம்பவத்தில் 18 பேர் காயமடைந்தனர்.

இந்தத் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ட்ரூமான் பிட்ஜெரால்ட் கூறுகையில், “பல பேர் கொண்ட கும்பல் ஒரு கூட்டத்தின் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் பலரும் படுகாயமடைந்தனர். ஒரு பெண், 2 ஆண்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ஒருவர் துப்பாக்கி குண்டுகளால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்தார்.

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்: பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்!

துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் அங்கிருந்து எவ்வாறு தப்பிச்சென்றனர் என்பது குறித்து குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை” என்றார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!