அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னால் அதிபர் டொனால்ட் டிரம்ப் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார். அதேபோல, டிரம்ப் சார்ந்துள்ள குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் ஜே. டி. வேன்ஸ் வெற்றி பெற்றிருப்பதுடன் அமெரிக்காவின் 50-ஆவது துணை அதிபராகிறார்.
இந்த நிலையில், தேர்தலில் தங்கள் கட்சி மகத்தான வெற்றியடைய வாக்களித்த மக்களுக்கு துணை அதிபராகும் ஜே. டி. வேன்ஸ் எக்ஸ் சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “இதை நிகழ்த்திக் காட்டியுள்ள எனது அழகான மனைவிக்கு நன்றி!
இத்தகைய உயர்பதவியில் நம் தேசத்துக்கு சேவையாற்ற எனக்கு இப்படியொரு வாய்ப்பளித்த அதிபர் டொனால்ட் ஜே. டிரம்புக்கு நன்றி!
அமெரிக்க மக்களுக்கு, அவர்களின் நம்பிக்கைக்கு நன்றி! உங்கள் அனைவருக்காகவும் போராடுவதை எப்போதும் நான் விடமாட்டேன்” எனப் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும் அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினருமான ஜேம்ஸ் டேவிட் பௌமேன் என்ற ஜே.டி. வேன்ஸ் ஜே.டி. வேன்ஸின், மனைவி உஷா சிலிகுரி இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளி பெண்மணி ஆவார்.
இதையும் படிக்க:அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி பெண்மணியின் கணவர்