அழகு குறித்த தவறான அளவுகோலை திரைப்படங்கள் முன்வைக்கின்றன..! பூமி பெட்னகர்!

யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் காஸ்டிங் இயக்குநராக 6 வருடங்கள் இருந்த பூமி பெட்னகர் 2015இல் நடிகையாக அறிமுகமானார். டாய்லெட், சுப் மங்கள் சாவ்தன், சொன்சிரியா, பதாய் தோ, பீட் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றார்.

கடைசியாக பூமி பெட்னகர் பக்‌ஷக் எனும் கிரைம் த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் சஞ்சய் மிஸ்ரா, ஆதித்யா ஸ்வஸ்டா, சாய் தம்ஹன்கர் நடித்துள்ளார்கள்.

35 வயதாகும் பூமி பெட்னகர் லேக்மீ ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு படங்கள் அழகின் மீதான தவறான அளவுகோல்களை முன்வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

ஐஏஎன்எஸுக்கு அளித்த பேட்டியில் பூமி பெட்னகர் கூறியதாவது:

நான் அடுத்ததாக ஆக்‌ஷன் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அதிலும் குறிப்பாக சுதந்திர போராட்டம் குறித்தான படத்தில் நடிக்க ஆசை. நான் இதைத்தான் இந்த பிரபஞ்சத்துடன் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

நடிகை பூமி பெட்னகர்

திரைப்படங்கள் வெறுமனே அழகையும் பேஷனையும் மட்டும் காட்டுவதற்காக இல்லை. அது ஒரு அளவுகோலை முன்வைக்கிறது. சினிமாவின் மூலமாக பலரையும் நாம் பாதிக்க முடியும். அதனால் அதைச் சரியாக பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும். சமீபகாலமாக நமது படங்கள் அழகுக்கு என்று உண்மைக்கு புறம்பான அளவுகோல்களை வைத்துவிட்டதென நினைக்கிறேன்.

எனக்கு ஃபேஷன் என்பது சுயத்தை வெளிப்படுத்துவது, சுதந்திரமாகவும் முன்னேற்றத்துக்கும் இருப்பதற்கு உதவுகிறது. நான் இதைச் செய்வதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது