அவருக்கு பிறகுதான் தோனி…பிடித்த கிரிக்கெட் வீரர்கள் குறித்து பேசிய ‘லப்பர் பந்து’ நடிகர் ஹரிஷ் கல்யாண்

'லப்பர் பந்து' படம் வரும் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'லப்பர் பந்து'. இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். 'லப்பர் பந்து' படம் வரும் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், பிடித்த கிரிக்கெட் வீரர்கள் யார் என்பது குறித்த கேள்விக்கு ஹரிஷ் கல்யாண் பதிலளித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,

'சின்ன வயதில் இருந்தே சச்சினுடைய கிரிக்கெட்டை பார்த்து வளர்ந்ததால் என்னுடைய முதல் தேர்வு சச்சின்தான். அதற்குபின் நம்ம தல தோனி. தோனியை பத்தி சொல்லவே வேண்டாம். அனைவருக்கும், குறிப்பாக நம்ம தமிழ் மக்களுக்கு தல என்பது ஒரு எமோஷன். வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களில் பாப் டுபிளஸிஸ் பிடிக்கும். அதுக்கும் ஒரு சின்ன காரணம் உள்ளது. ஏனென்றால், அவர் சிஎஸ்கே அணியில் ஆடியுள்ளார். பிடித்த பவுலர் என்றால் பும்ரா. குறிப்பாக அவர் வீசும் யார்கர் எனக்கு ரொம்ப பிடிக்கும்,' என்றார்.

#LubberPandhu DIARIES @iamharishkalyan names his top favorite cricketers, and their connection to the film ❣️Pad up for the film in theatres on September 20th!Produced by @lakku76 andCo-produced by @venkatavmedia. @Prince_Pictures#AttakathiDinesh@tamizh018@isanjkayy… pic.twitter.com/G7AYZFxIe9

— Prince Pictures (@Prince_Pictures) September 14, 2024

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!