அவைத்தலைவருடன் வார்த்தை போர்… எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு

அவைத்தலைவருடன் வார்த்தை போர்… எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு… இரு அவைகளும் ஒத்திவைப்பு!

ஜெயா பச்சன்

மாநிலங்களவையில் இரண்டாவது நாளாக அவை தலைவருக்கும், எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் வார்த்தை போர் ஏற்பட்டதால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.

ஜூலை 31ஆம் தேதி அவையில் பாஜக எம்பி கன்ஷ்யாம் திவாரி சமஸ்கிருதத்தில் பேசியபோது மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை விமர்சித்ததாக காங்கிரஸ் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார். இதற்கு விளக்கம் அளித்த அவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், தான் இருவரையும் அழைத்து விவாதித்ததாகவும், அவர் சமஸ்கிருதத்தில் புகழ்ந்து பேசியதாகவும் கூறினார். இதனை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏற்க மறுத்து, அவைத்தலைவர் ஒரு சார்பாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டினர். அப்போது பேசிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா, முன்பு ஒருமுறை காங்கிரஸ் உறுப்பினர் ப.சிதம்பரத்துக்கு பதிலளித்த போது அவைத் தலைவரின் தொனியில் வேறுபாடு இருந்ததை சுட்டிக்காட்டினார்.

விளம்பரம்

இதையடுத்து இந்த விவகாரத்தில் இறுதியாக பேச சமாஜ்வாதி எம்பி ஜெயா அமிதாப் பச்சனை அவைத் தலைவர் அழைத்தார். அப்போது, தன்னை ஜெயா பச்சன் என்று அழைத்தால் போதுமானதாக இருந்திருக்கும் என அவர் அதிருப்தி தெரிவித்தார். ஒரு கலைஞனாக தனக்கு உடல் மொழி மற்றும் வெளிப்பாடுகள் புரியும் என்பதால் உங்கள் தொனி சரியாக இல்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்த கருத்தை அவைத்தலைவர் ஏற்க மறுத்த நிலையில், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் பரபரப்பானது.

விளம்பரம்

தொடர்ந்து பேசிய அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர், எனது தொனியைப் பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ளுமாறும், நீங்கள் பிரபலமாக இருக்கலாம், ஆனால் நல்லொழுக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றும் பதிலடி கொடுக்க, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Who does Jaya Bachchan think she is? Every day, she throws the same tantrums.
Jagdeep Dhankhar Ji put her in her place today. Hopefully, she’ll learn from this.
#JayaBachan#Dhankar#Jaya_Bachchan#parliamentsession2024#Parliamentpic.twitter.com/lTgaEHEhdS

— Indian Observer (@ag_Journalist) August 9, 2024

விளம்பரம்

இதனைத்தொடர்ந்து பேசிய அவைத்தலைவர், “ஜெயா ஜி, நீங்கள் ஒரு பெரிய நற்பெயரைச் சம்பாதித்திருக்கிறீர்கள். ஒரு நடிகர் இயக்குனருக்கு கட்டுட்பட்டவர் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் ஒவ்வொரு நாளும் நான் திரும்பத் திரும்பச் சொல்ல விரும்பவில்லை. நீங்கள் என் தொனியைப் பற்றி பேசுகிறீர்களா? இதோடு போதும்..! நீங்கள் ஒரு பிரபலமாக இருக்கலாம், ஆனால் நல்லொழுக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.” என்று பேசினார்.

விளம்பரம்

பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச நேரம் கேட்ட நிலையில், இந்த விவகாரம் குறித்து மேலும் பேச விருப்பமில்லை என கூறி கேள்வி நேரத்தை தொடர முயன்றார். இதனிடையே, தனக்கு கணவரை வைத்து அடையாளம் காட்ட வேண்டாம் என்று ஜெயா பச்சன் ஏற்கனவே வலியுறுத்தியிருந்த நிலையில், இரண்டாவது முறையாக அவைத்தலைவர் அவ்வாறு அழைத்தால் ஜெயா பச்சன் கோபமாக பேசினார். அவருக்கு ஆதரவாக சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் குரல் எழுப்பி, அவைத்தலைவரை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

விளம்பரம்இதையும் படிங்க: வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா – மக்களவையில் வந்த எதிர்ப்பால் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைப்பு!

இந்நிலையில், அடுத்தடுத்த ஒத்திவைப்புக்குப் பிறகு, மாநிலங்களவை கூட்டத் தொடரை திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்னதாகவே முடித்துவைப்பதாக மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார். இதேபோல, மக்களவையும் ஒரு நாள் முன்னதாகவே தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Parliament

Related posts

கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாற்றமா? – அலறியடித்து ஓடும் அரசு ஊழியர்கள்

“அவரது உழைப்பும், சேவையும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்” – பாப்பம்மாளுக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு கட்டணத்தை உரிய காலத்துக்குள் செலுத்துவோம்: கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி தகவல்