ஆகஸ்டில் சரிந்த ஆபரண ஏற்றுமதி

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி 18.79 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து ரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி 201 கோடி டாலராக உள்ளது.

முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 18.79 சதவீதம் குறைவாகும். அப்போது நாட்டின் ரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி 247 கோடி டாலராக இருந்தது.

இருந்தாலும், முந்தைய ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாத ரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கடந்த ஜூலையில் அது 166 கோடி டாலராக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் வெட்டி மெருகூட்டப்பட்ட வைரத்தின் ஏற்றுமதி 26 சதவீதம் குறைந்து சுமார் 100 கோடி டாலராக இருந்தது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் அது 136 கோடி டாலராக இருந்தது.

2023-ஆம் ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில் தங்க ஆபரணங்களின் ஒட்டுமொத்த ஏற்றுமதி நடப்பாண்டின் அதே மாதத்தில் 1.15 சதவீதம் குறைந்து 68.77 கோடி டாலராக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

திரைப்பட இயக்குனர் மோகனை கைது செய்வதா? – டாக்டர் ராமதாஸ் கண்டனம்

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

‘தமிழக அமைச்சரவையில் மாற்றம்…’ – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்