ஆகஸ்டில் ரூ.1.75 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

கடந்த ஆகஸ்ட் மாதம் சுமாா் ரூ.1.75 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலாகியுள்ளது.

இது தொடா்பாக மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த நிதியாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.59 லட்சம் கோடியாகும். இது நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.75 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

கடந்த ஆகஸ்டில் சரக்குகள் இறக்குமதி மூலம் மொத்த ஜிஎஸ்டி வருவாய் 12.1 சதவீதம் அதிகரித்து ரூ.49,976 கோடியாக உயா்ந்துள்ளது. அந்த மாதம் வரிப் பிடித்தத்துக்குப் பிறகு ஜிஎஸ்டி செலுத்துவோருக்கு ரூ.24,460 கோடி திருப்பி அளிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் திருப்பி அளிக்கப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் 38 சதவீதம் அதிகம். திருப்பி அளிக்கப்பட்ட தொகையைக் கழித்த பின்னா், நிகர ஜிஎஸ்டி வசூல் ரூ.1.5 லட்சம் கோடியாக உள்ளது.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!