ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் படிக்க இன்றிரவு வெளிநாடு செல்கிறேன்: அண்ணாமலை

சென்னை: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க, இன்றிரவு வெளிநாடு செல்கிறேன், நான் வெளிநாடு சென்றாலும் என் இதயம் இங்கேதான் இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி தொடர்ந்து அறிக்கைகளை வெளியிடுவேன். வெளிநாடு சென்றாலும் சண்டைகள் தொடரும். தமிழக முதலமைச்சர் ஏற்கனவே மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் தோல்வியில்தான் முடிந்துள்ளன என்று சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக இன்றிரவு வெளிநாடு செல்கிறேன். அரசியல் படிப்புக்காக வெளிநாடு சென்றாலும் தமிழக அரசின் நடவடிக்கைகளை உற்று கவனிப்பேன். ஆளுக்கட்சிக்கு எதிரான சண்டை தொடரும்.

வார்த்தைகளால் பதில் சொல்லி எதிர்பார்த்த வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டாம்: மு.க. ஸ்டாலின்

இன்றிரவு வெளிநாடு புறப்படுகிறேன். நான் வெளிநாடு சென்றாலும் என் இதயம் இங்கேதான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனத்தை திரும்பப்பெற மாட்டேன் என்றும், 39 வயது அண்ணாமலை பேசியது தவறு என்றால், 70 வயது பழனிசாமி பேசியது சரியா? முடிக்கு டை அடிப்பதால் மட்டும் இளைஞர் இல்லை, பேச்சு, செயல் என அனைத்தும் தான் இளைஞர் என்பதைக் காட்டும் என்றும் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசுகையில், பிரதமர் மோடி உள்ளத்தால் இன்னும் இளைஞர்தான் என்று அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை என்பது குறித்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அண்ணாமலை, 5 ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாயை தமிழக அரசுக்கு மத்திய கல்வித் துறை ஒதுக்கியிருக்கிறது. கல்வி நிதி ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அரசியல் நிகழ்வாகவே பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கவிருக்கிறது. இந்த முறை, பாஜக உறுப்பினர் சேர்க்கை பணி, கிராமத்தை நோக்கி நடைபெறவிருக்கிறது என்றும் அண்ணாமலை கூறினார்.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!