ஆக.13-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்

முதலீடுகளை ஈர்க்க முதல் -அமைச்சர் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூடுகிறது.

சென்னை,

உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக, முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வருகிற 27-ந்தேதி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ளார். இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், முதல்-அமைச்சர் வெளிநாடு செல்லும்போது அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டியது வழக்கமான நடைமுறையாக உள்ளது. அதன்படி, முதல்- அமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவுள்ளது.

Related posts

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் மகாராஜா பட நடிகை!

ஆஸ்கருக்கு லாபதா லேடீஸ் பரிந்துரை!

லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல்: பலி 182 ஆக உயர்வு!