ஆசியான் மாநாட்டில் முக்கிய தலைவர்களைச் சந்தித்த பிரதமர் மோடி!

லாவோஸ் நாட்டில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி முக்கியத் தலைவர்களைச் சந்தித்தார்.

ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக்.10) லாவோஸ் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியானில்’ புருணே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய 10 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இக்கூட்டமைப்புக்கு நடப்பாண்டு லாவோஸ் தலைமை வகிக்கிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமர், பிலிப்பின்ஸ் அதிபர், ஆஸ்திரியா அதிபர் அல்பானீஸ், மலேசிய அதிபர் அன்வர் இப்ராகிம், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் உள்ளிட்டோரை சந்திந்த புகைப்படங்களையும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Always a delight to interact with PM Anwar Ibrahim. @anwaribrahimpic.twitter.com/XEeQzw6j8C

— Narendra Modi (@narendramodi) October 10, 2024

மேலும், ஜப்பான் பிரதமரைச் சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ஜப்பான் அதிபர் இஷிபாவுடன் மிகவும் ஆக்கப்பூர்வமான சந்திப்பு நடைபெற்றது. அவர் ஜப்பானின் அதிபரான சில நாள்களிலேயே அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் பேச்சுக்கள் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் பலவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கானது. கலாசார தொடர்புகளை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது” எனப் பதிவிட்டுள்ளார்.

石破総理と非常に生産的な会議を持ち、日本の首相としてご就任されたばかりの数日後にお会いできたことは、とても嬉しいです。会議では、インフラ整備、接続性、防衛、その他の協力の強化のあらゆる方法について話し合いました。また、文化的な交流の強化についても話しました。 pic.twitter.com/Y14jqWeyR1

— Narendra Modi (@narendramodi) October 10, 2024

Related posts

ஒடிசா: வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை-மகள் பாம்பு கடித்து பலி

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக