ஆசிய சாம்பியன் கோப்பை- பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

2 கோல்களையும் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் அடித்து அசத்தினார்.

இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் தேவையில்லை: பந்துவீச்சு பயிற்சியாளர்

இரு அணிகளும் ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதிபெற்றுவிட்டது என்றாலும், இந்தியா – பாகிஸ்தான் மோதல் எப்போதும் போல் இரு அணிகள் ரசிகா்களின் கண்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது.

போட்டியில் இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களிலுமே வெற்றி கண்ட ஒரே அணியாக இருக்கும் நடப்பு சாம்பியன் இந்தியா, தற்போது பாகிஸ்தானையும் வீழ்த்தி தோல்வியே காணாமல் லீக் சுற்றை நிறைவு செய்துள்ளது.

ஒலிம்பிக்கில் அடுத்தடுத்து இரு வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ள இந்தியா, 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை, 2022 ஆசிய கோப்பை என பாகிஸ்தானுடனான முந்தைய ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து