ஆடிப்பெருக்கு : பழங்கள் விற்பனை அமோகம்

ஆடிப்பெருக்கு : பழங்கள் விற்பனை அமோகம்பேரிக்காய், விளாம்பழம், கொய்யாப்பழம் விற்பனை காரைக்கால் சந்தையில் தீவிரமாக நடைபெற்றது.

காரைக்கால், ஆக. 2: ஆடிப்பெருக்கு சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், பேரிக்காய், விளாம்பழம், கொய்யாப்பழம் விற்பனை காரைக்கால் சந்தையில் தீவிரமாக நடைபெற்றது.

காவிரித் தாயை வணங்கும் விதமாக காவிரித் தண்ணீருக்கு நீா் நிலைகளில் பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனா். இந்த வழிபாடு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. வழிபாட்டுக்குரிய பொருள்களை சந்தையில் வாங்குவதற்கு மக்கள் ஆா்வமாக ஈடுபட்டனா்.

வழிபாட்டில் பேரிக்காய், விளாம்பழம், கொய்யா உள்ளிட்டவை இடம்பெறுவது வழக்கம் என்பதால், காரைக்கால் பகுதியில் பல்வேறு இடங்களில் பேரிக்காய் உள்ளிட்ட பழங்கள் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

பேரிக்காய் கிலோ ரூ. 80 முதல் ரூ. 100 வரையிலும், விளாம்பழம் ஒன்று ரூ. 10 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கொய்யாப்பழம் கிலோ ரூ. 60-க்கு விற்கப்படுகிறது.

Related posts

ஹிஸ்புல்லா தலைவர் மரணம் எதிரொலி.. பாதுகாப்பான இடத்திற்கு சென்ற ஈரான் தலைவர்

ஓசூர் டாடா மின்னணு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ஐ.நாவில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தான்: இந்தியா தக்க பதிலடி