ஆட்சிக்கு வந்த 1 மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து: பிரசாந்த் கிஷோர்

பிகாரில் "ஜன் சுராஜ் அரசு அமைந்தால், ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை ரத்து செய்வேன்" என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். ஜன் சுராஜ் கட்சியை அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அவரது கருத்துகள் வந்துள்ளன.

பூரண மதுவிலக்கு என்ற கொள்கையை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பேசி வரும் நிலையில், பிகாரில் நடைமுறையில் இருக்கும் மதுவிலக்கை ரத்து செய்வேன் என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

விரைவில் ஜன் சுராஜ் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கவுள்ள தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரிடம், புதிய கட்சி தொடங்குவதற்கான பணிகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ​​கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சிக்கான பணிகள் நடைபெற்று வருவதால், "எந்த ஒரு சிறப்பு பணிகளும் தேவையில்லை" என்று கூறினார்.

மேலும் பிகாரில் "ஜன் சுராஜ் அரசு அமைந்தால், ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை ரத்து செய்வேன்." பெண்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என அஞ்சும் மற்ற கட்சிகளைப் போல் நான் இல்லை. நான் நடைமுறைக்கு பயனளிக்கும் அரசியலை நம்புபவன் என தெரிவித்தார்.

தேஜஸ்வி யாதவ் மற்றும் நிதீஷ் குமார் இருவரும் மாநிலத்திற்கு "சேதத்தை" ஏற்படுத்தி உள்ளார்கள், அவர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தினார்.

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததற்காக முதல்வர் நிதிஷ் குமார் கைகூப்பி மன்னிப்புக் கேட்டதாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் மீதும் கிஷோர் கருத்து தெரிவித்தார்.

“இந்தப் பிரச்னை நிதீஷ் குமாருக்கும் தேஜஸ்வி யாதவுக்கும் இடையே நடைப்பெற்றுள்ளது, யார் யாரிடம் கைகூப்பி மன்னிப்புக் கேட்டாலும் பரவாயில்லை; இருவருமே பிகாருக்கு சேதம் விளைவித்தவர்கள். பிகார் மக்கள் இருவரையும் 30 ஆண்டுகளாக பார்த்து வருகிறார்கள். நாங்கள் அவர்கள் இருவரும் பிகாரை விட்டு வெளியேற வேண்டும்" என்று வலியுறுத்துகிறோம் என பிரசாந்த் கிஷோர் கூறினார்.

Related posts

தமிழகத்தில் 26-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு

நாகை: வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு