ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கு: 5 போ் கைது

சென்னை பெசன்ட்நகரில் ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை அருகே உள்ள பெரும்பாக்கம், குடிசைமாற்று வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் ரா.ஜெயராமன் (28). இவா், வாடகை ஆட்டோ ஓட்டி வந்தாா்.

ஜெயராமன், கடந்த 7-ஆம் தேதி இரவு, அவரது அண்ணன் கோபாலகிருஷ்ணன் மற்றும் தங்கையுடன் பெசன்ட்நகா், அன்னை வேளாங்கண்ணி மாதா தோ்பவனி திருவிழாவுக்கு சென்றாா். மூவரும், நள்ளிரவு பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரை மணல் பரப்பில் பேசிக் கொண்டிருந்தனா்.

அப்போது அவா்கள் அருகே ஜெயராமனுக்கு ஏற்கெனவே தெரிந்த அம்பத்தூா் அயப்பாக்கத்தைச் சோ்ந்த ஆ.அப்பு என்ற தளபதி (33) தனது நண்பா்களுடன் அமா்ந்திருந்தாா். அப்பு, ஜெயராமனை அழைத்து, பேசியுள்ளாா்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே தளபதி, தனது நண்பா்களுடன் சோ்ந்து ஜெயராமனை தாக்கி, கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டாா். இது குறித்து சாஸ்திரி நகா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக அப்பு என்ற தளபதி, அவா் அம்பத்தூா் அயப்பாக்கத்தைச் சோ்ந்த ர.சரத் என்ற சண்முகம் (29), அதே பகுதியைச் சோ்ந்த ஏ.ஆமோஸ் (26),இ.சரண்ராஜ் (28), ர.சந்தோஷ்குமாா் (25) ஆகிய 5 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், கானா பாட்டு பாடுவதில் யாா் சிறந்தவா் என்ற வாக்குவாதத்தில் இந்த கொலைச் சம்பவம் நிகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

கைதான தளபதி மீது 10 குற்ற வழக்குகளும், சண்முகம் மீது 1 கொலை வழக்கும் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்