ஆதி கைலாஷ் நிலச்சரிவில் சிக்கிய தமிழக யாத்திரிகர்கள் 15 பேர் மீட்பு!

சிதம்பரத்திலிருந்தது செப்டம்பர் 1ஆம் தேதி உத்தராகண்டில் உள்ள ஆதி கைலாஷுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றவர்களில் 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

18 ஆண்கள், 12 பெண்கள் என மொத்தம் 30 பேர் ஆதி கைலாஷுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற நிலையில், ஆதி கைலாஷ் செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட்டு 18 கிலோமீட்டர் தூரத்தில் 30 பேரும் சிக்கிக் கொண்டனர். மேலும் அவர்கள் சென்ற ஜீப்பில் பெட்ரோல் இல்லாததால் நடுவழையில் நின்று விட்டதாக கூறப்படுகிறது.

ஆதி கைலாஷில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வரும்போது நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு பயண வழியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாமில் அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், இன்று காலை மீண்டும் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் வெளியேற முடியாமல் பரிதவித்து வந்தனர்.

முதல்வர் பதவியிலிருந்து ராஜிநாமா! -அரவிந்த் கேஜரிவால் அறிவிப்பு

இது குறித்து யாத்திரிகர்கள் சிதம்பரத்தில் உள்ள உறவினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதி கைலாஷிலிருந்து யாத்திரிகர்களை மீட்க நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் உத்தரகாண்ட் மாநில அதிகாரிகளை தொடர்பு கொண்டு ராணுவத்தின் மூலம் அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து நிலச்சரிவு சிக்கிய நபர்களை மீட்கும் பணி துவங்கியது. முதல் கட்டமாக 15 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்கள் டசார்ஜிலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட நபர்கள் விவரம்: சிதம்பரத்தைச் சேர்ந்த

  • பராசக்தி ( 70),

  • பார்வதி(70 ),

  • மலர் (54),

  • கோமதி(66),

  • அலமேலு கிருஷ்ணன்(73) உள்ளிட்ட 15 பேர்

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்