ஆந்திரத்தில் இலவச எரிவாயு உருளை வழங்கும் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு நவ. 1ஆம் தேதி தொடக்கிவைக்கவுள்ளார்.
இலவச எரிவாயு வழங்குவதற்காக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள பெட்ரோலிய நிறுவனத்திற்கு ரூ. 894 கோடி மதிப்பிலான காசோலை வழங்கிய பின்னர், இந்த அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
இலவச எரிவாயு உருளை வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் எரிவாயு உருளைகளை முன்பதிவு செய்ய செவ்வாய்க்கிழமை (அக். 29) முதல் முன்பதிவு தொடங்கியது.
சட்டப்பேரவைத் தேர்தலின்போது சூப்பர் 6 என்ற பெயரில் தெலுங்கு தேசம் கட்சி அறிவித்த திட்டங்களில் ஒன்றாக இலவச எரிவாயு உருளை வழங்கும் திட்டம் உள்ளது.
இந்நிலையில் இந்தத் திட்டத்தின்கீழ் எரிவாயு வழங்கும் பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுடனான ஒப்பந்த தொகையை காசோலையாக வழங்கினார்.
இந்தத் திட்டத்துக்காக ஆந்திர சட்டப்பேரவையில் ரூ. 2,684 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இணையவழி பணமோசடி: தமிழகம் உள்பட 3 மாநிலங்களைச் சேர்ந்த 24 பேர் கைது!