ஆந்திரத்துக்கான பட்ஜெட் அறிவிப்பு! -சந்திரபாபு நாயுடு நன்றி

ஆந்திரத்துக்கான பட்ஜெட் அறிவிப்பு! -சந்திரபாபு நாயுடு நன்றிஆந்திரத்துக்கான பட்ஜெட் அறிவிக்கப்பட்டதற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்துள்ளார்.

ஆந்திரத்துக்கான பட்ஜெட் அறிவிக்கப்பட்டதற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் மாநிலத்தின் தேவைகளை அங்கீகரித்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு ஆந்திர மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அமராவதி, போலவரம், தொழில்துறை மையங்கள், ஆந்திரத்தில் பின்தங்கிய பகுதிகளின் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. மத்திய அரசின் இந்த ஆதரவு ஆந்திரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நீண்ட தூரம் செல்லும்.

இந்த முற்போக்கான நம்பிக்கையை அதிகரிக்கும் பட்ஜெட்டை தாக்கல் செய்ததற்கு நான் உங்களை வாழ்த்துகிறேன்” என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், ஆந்திர அமைச்சருமான நாரா லோகேஷ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “மத்திய அரசுக்கு நன்றி, இந்த பட்ஜெட் மாநிலத்திற்கு புதிய உதயம்” என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட். பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுப்பதா? – ராமதாஸ்

சிறந்த கைத்தறி நெசவாளர், வடிவமைப்பாளர்களுக்கு விருது – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு: இயக்குனர் மோகன் மீது மேலும் ஒரு புகார்