ஆந்திராவின் மகிழ்மதி.. சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டம்

ஆந்திராவின் மகிழ்மதி.. சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டத்தின் கள நிலவரம் என்ன?

2014 ஆம் ஆண்டு ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்ட போது, தெலங்கானா வசம் சென்றது தலைநகர் ஐதராபாத். இதனால், ஆந்திராவுக்கு புதிய தலைநகரத்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார் அப்போது முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு. நாட்டின் முக்கிய நகரமாக கட்டுமானம், தொழில், தொழில்நுட்பம் என அனைத்து வகையிலும் வளர்ச்சியடைந்த ஐதராபாத்திற்கு இணையான தலைநகரத்தை உருவாக்க அமராவதியை தேர்ந்தெடுத்தார் சந்திரபாபு.

ராயலசீமா என அழைக்கப்படும் வடக்கு ஆந்திராவையும் கடலோர ஆந்திராவையும் இணைக்கும் வகையில் மையப்பகுதியில் விஜயவாடா அருகே அமைந்துள்ளது இந்த அமராவதி. கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள இந்த நகரத்தை வளப்படுத்த ஒரு தனி அமைப்பை உருவாக்கி பணிகளை தொடங்கியிருந்தார் சந்திரபாபு நாயுடு. கேப்பிட்டல் சிட்டி அமராவதி திட்டத்திற்கான அடிக்கல்லை 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். இதன் வளர்ச்சி பணிகளுக்காக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து 33,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

விளம்பரம்

தலைமைச்செயலகம், சட்டப்பேரவை, உயர்நீதிமன்றம் மற்றும் மற்ற துறைகளுக்கான தலைமையிடங்கள் உருவாக்கும் பணிகள் முடிக்கிவிடப்பட்ட நிலையில், 2019 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது, முதலமைச்சராக பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி, அமராவதியை தலைநகராக்கும் முடிவில் உடன்படாமல் அதன் பணிகளை கிடப்பில் போட்டார்.

Also Read:
புதுச்சேரியில் கழிவறை வழியாக வீடுகளுக்குள் விஷ வாயு வந்தது எப்படி? அதிர்ச்சி தகவல்

இதனால், கடந்த 5 ஆண்டுகளாக எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படாமல் புதர் மண்டிய பகுதியில் சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் மட்டும் செயல்பட்டு வருகிறது. கடும் விமர்சனத்திற்கு உள்ளான ஜெகன்மோகனின் இந்த முடிவு, சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் படுதோல்வி அடைய முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

இந்நிலையில், ஆந்திராவில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்துள்ள நிலையில், சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமாக அமராவதி மீண்டும் உயிர்பெற தொடங்கி உள்ளது. ஆங்காங்கே வளர்ச்சி பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், 10 ஆண்டுகளாக உள்ள தலைநகர ஏக்கம், சந்திரபாபு நாயுடுவால் பூர்த்தியாகும் என காத்திருக்கிறார்கள் ஆந்திர மக்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Andhra Pradesh
,
N Chandrababu Naidu

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்