ஆந்திராவில் ஆட்சியமைக்குமாறு சந்திரபாபு நாயுடுவுக்கு கவர்னர் அழைப்பு

ஆந்திராவில் ஆட்சியமைக்கும் தெலுங்கு தேச கட்சி… சந்திரபாபு நாயுடுவுக்கு ஆளுநர் அழைப்பு!

ஆந்திர கவர்னருடன் சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் ஆட்சியமைக்க வருமாறு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தார். நாளை அவரது தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்கும் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

175 தொகுதிகளை கொண்ட ஆந்திர பிரதேச சட்டப் பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 164 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்எல்ஏக்கள் அலோசனைக் கூட்டம் விஜயவாடாவில் நடைபெற்றது. கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை, ஜனசேனா தலைவர் பவன் கல்யான் முன்மொழிந்தார்.

விளம்பரம்

இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கூட்டணி கட்சிகளிடன் ஆதரவு கடிதங்களுடன் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யான் ஆளுநர் மாளிகை விரைந்தனர். தொடர்ந்து எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் அப்துல் நசீரிடம் வழங்கிய சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

இதையடுத்து ஆட்சியமைக்க வருமாறு சந்திரபாபு நாயுடுவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து நாளை புதனன்று சந்திரபாபு நாயுடு ஆந்திர பிரதேசம் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

விளம்பரம்இதையும் படிங்க – Modi Ka Parivar : பாஜக சமூக வலைதள ஆதரவாளர்களுக்கு கோரிக்கை வைத்த பிரதமர் மோடி… வைரலாகும் பதிவு!

அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையிலும், தனது அமைச்சரவையில் பவன் கல்யாண் கட்சிக்கு மூன்று இடங்களும், பாஜகவுக்கு இரண்டு இடங்களும் ஒதுக்க சந்திரபாபு முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க – தமிழ்நாட்டிற்கு ரூ.5700 கோடியை வரிப் பகிர்வாக விடுவித்த மத்திய அரசு.. உ.பிக்கு எவ்வளவு தெரியுமா?

மேலும், துணை முதலமைச்சராக பவன் கல்யாண் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
chandrababu
,
Telugu Desam Party

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்