ஆந்திரா வெள்ளம் : தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் பயணிகள் மீட்பு

ஆந்திரா வெள்ளம் : இரண்டு நாட்காளக சிக்கி தவித்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் பயணிகள் மீட்பு

ஆந்திராவில் கனமழை, வெள்ளம் காரணமாக தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கித் தவித்த பயணிகள், 2 நாட்களுக்கு பின் ஜேசிபி, டிராக்டர் உதவியுடன் மீட்கப்பட்டனர்.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. பல இடங்களில் மழை வெள்ளத்தால் ரயில்வே தண்டவாளங்கள், மணல் அரிப்பு ஏற்பட்டு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஒரு சில இடங்களில் சிக்னல் கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால், ஆங்காங்கே ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதேபோல், ராயண்ணாபாடு என்ற ரயில் நிலையத்திற்கு அருகே தண்டவாளங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால், அந்த வழியாக நேற்று முன்தினம் வந்த டெல்லி – சென்னை இடையேயான தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சிக்கிக் கொண்டது.

விளம்பரம்

கடந்த 2 நாட்களாக மழை வெள்ளத்துக்கு நடுவே வெளியேற முடியாமல் ரயிலிலேயே பயணிகள் சிக்கித் தவித்து வந்தனர். இந்த நிலையில், டிராக்டர், ஜேசிபி உள்ளிட்டவை உதவியுடன் பயணிகளை மீட்ட ரயில்வே அதிகாரிகள், அரசுப் பேருந்துகள் மூலம் விஜயவாடாவிற்கு அனுப்பி வைத்தனர்.

விஜயவாடாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், விஜயவாடா கனகதுர்கை அம்மன் கோயில், அட்ஷய பாத்திரம் தன்னார்வ அமைப்பு, தனியார் ஓட்டல்கள் உள்ளிட்டவை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகம் செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
ஒரே நாளில் 77 லட்சம் பயணிகள்… ரெக்கார்ட் பிரேக்கிங் செய்த டெல்லி மெட்ரோ!

ஆந்திராவில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஸ்ரீகாகுளம், விஜயநகரம், காக்கிநாடா, நந்தியாலா உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விஜயவாடாவின் பல இடங்களில் இடுப்பளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். வீடு, உடைமைகளை இழந்த மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

விளம்பரம்

இந்நிலையில் விஜயவாடாவில் படகில் சென்று 2ஆவது நாளாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆய்வு மேற்கொண்டார். நேற்று இரவு 12 மணி வரை ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த சந்திரபாபு, 2ஆவது நாளாக மக்களை நேரில் சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Andhra Pradesh
,
N Chandrababu Naidu
,
Telangana

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்