ஆந்திர முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு.. பிரதமர் உட்பட 7 மாநில முதல்வரகள் பங்கேற்பு

சந்திரபாபு நாயுடு

ஆந்திரப்பிரதேசத்தின் முதலமைச்சராக 4 ஆவது முறையாக சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ள மேடை, முழுவீச்சில் தயாராகி வருகிறது. ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கூட்டணி அமோக வெற்றி பெற்றது

இந்நிலையில், ஜூன் 12 ஆம் தேதி காலை 11:27 மணிக்கு கிருஷ்ணா மாவட்டம் கன்னவரத்தில் அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார். இதற்காக கேசரபள்ளி ஐடி பார்க் அருகே உள்ள மைதானத்தில் விழாவுக்கான ஏற்பாடு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

70,000 பேர் அமரும் வகையிலும் நிகழ்ச்சி நடைபெறும்இடத்தில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய தலைவர்களும் ஏழு மாநில முதலமைச்சர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
N Chandrababu Naidu

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்