ஆந்திர வெள்ளம்: சென்னையில் மேலும் 12 ரயில்கள் ரத்து!

ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், சென்னையில் இருந்து இயக்கப்படும் 12 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், 6 ரயில்களின் வழித்தடங்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி, விஜயவாடா, அமராவதி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் விஜயவாடா-காசிபேட் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்ணீா் தேங்கிக் காணப்படுகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆந்திரம் வழியாக தமிழ்நாடு, கேரளம் வரும் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்படுவதாக இருந்த பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் சில ரயில்கள் ரத்து செய்து திங்கள்கிழமை காலை தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

செப். 2 திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்ட ரயில்கள்

1. ரயில் எண். 12269, சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 6.35 மணிக்கு நிஜாமுதீன் புறப்படவிருந்த துரந்தோ விரைவு ரயில் ரத்து

2. ரயில் எண். 12842, சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7.00 மணிக்கு சாலிமார் புறப்படவிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ரத்து

3. ரயில் எண். 12656, சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10.10 மணிக்கு அகமதாபாத் புறப்படும் நவஜீவன் விரைவு ரயில் ரத்து

4. ரயில் எண். 12852, சென்னை சென்ட்ரலில் இருந்து பகல் 3.40 மணிக்கு பிலாஸ்பூர் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் ரத்து

5. ரயில் எண். 12669, சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.40 மணிக்கு சாப்ரா புறப்படும் கங்கை காவேரி விரைவு ரயில் ரத்து

6. ரயில் எண். 12615, சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 6.40 மணிக்கு தில்லி புறப்படும் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் ரத்து

7. ரயில் எண். 12621, சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10 மணிக்கு தில்லி புறப்படும் தமிழ்நாடு விரைவு ரயில் ரத்து

8. ரயில் எண். 22648, கொச்சுவேலியில் இருந்து சென்னை வழியாக இரவு 11.35 மணிக்கு கோர்பாவுக்கு இயக்கப்படும் விரைவு ரயில் ரத்து

9. ரயில் எண். 22859, புரியில் இருந்து பகல் 1.50 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் விரைவு ரயில் ரத்து

10. ரயில் எண். 12759, தாம்பரத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு ஹைதராபாத்துக்கு இயக்கப்படும் சார்மினார் விரைவு ரயில் ரத்து

ரயில்கள் ரத்து

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்