ஆனந்த் அம்பானி திருமணத்தில் உணர்ச்சிபட பேசிய முகேஷ் அம்பானி…

மகன் ஆனந்த் அம்பானி திருமணத்தில் உணர்ச்சிபட பேசிய முகேஷ் அம்பானி… மனைவி குறித்து பெருமிதம்!

முகேஷ் அம்பானி

மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் அதிபர் முகேஷ் அம்பானி உணர்ச்சிபட பேசி, மணமக்களை ஆசிர்வதிக்குமாறு விருந்தினர்களை கேட்டுக் கொண்டார். மனைவி நீடா அம்பானி குறித்தும் அவர் பெருமிதத்துடன் பேசினார்.

ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி – நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் வீரேன் – ஷைலா மெர்ச்சன்டின் மகள் ராதிகா மெர்ச்சென்டிற்கும் இடையே கடந்த வெள்ளியன்று திருமணம் நடைபெற்றது. இதில் உள்ளூர் முதல் சர்வதேச பிரபலங்கள் வரை கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த திருமணத்தில் விருந்தினர்கள் முன்னிலையில் முகேஷ் அம்பானி பேசியதாவது-

விளம்பரம்

எனது நண்பர்கள், குடும்பத்தினர், குறிப்பாக நீண்ட தூரத்திலிருந்து வந்து ஆனந்த் – ராதிகா மெர்ச்சென்டை வாழ்த்திய உங்கள் அனைவரையும் நானும், நீதாவும், வீரேன் ஷைலாவுடன் இணைந்து வரவேற்கிறேன். இந்திய கலாசாரத்தில் திருமணங்கள் என்பவை இரு நபர்களை மட்டுமின்றி 2 குடும்பங்களையும் அவர்களை சார்ந்தவர்களையும் இணைக்கின்றன.

ஆகாஷ், இஷாவுக்கு பின்னர் ஆனந்திற்கு நடக்கும் இந்த திருமணம் எங்கள் குடும்பத்தின் கடைசி திருமணமாகும். இதற்காக எனது மனைவி நீடா மிக கடுமையாக உழைத்தார். இந்த திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும் நினைவுகள் நீண்ட காலத்திற்கு மனதில் நிற்கும் என உறுதியாக சொல்ல முடியும். இந்த திருமண கொண்டாட்ட நிகழ்ச்சிகளை சிறப்பாக ஆரம்பித்தோம்.

விளம்பரம்

இப்போது இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்துள்ளது. ஆனந்தையும், ராதிகாவையும் எனது குடும்பத்தினர் அவர்களது தாத்தா பாட்டி உள்ளிட்ட அனைவரும் ஆசிர்வதிக்கின்றனர். இருவரும் வளம், வளர்ச்சி, மகிழ்ச்சி என அனைத்தையும் பெற வாழ்த்துகிறேன்.

எல்லையில்லா மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். இதேபோன்று இங்குள்ள அனைவரும் ஆனந்த் – ராதிகாவுக்கு எல்லாம் கிடைக்க பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS
,
mukesh ambani

Related posts

கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாற்றமா? – அலறியடித்து ஓடும் அரசு ஊழியர்கள்

“அவரது உழைப்பும், சேவையும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்” – பாப்பம்மாளுக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு கட்டணத்தை உரிய காலத்துக்குள் செலுத்துவோம்: கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி தகவல்