ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மீதான ஜிஎஸ்டியை எதிர்ப்போம்: அதிஷி

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்குச் சுமையை ஏற்படுத்தும் என்பதால் இராண்டாயிரம் ரூபாய்க்குள் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மீதான ஜிஎஸ்டி விதிக்கும் மத்திய அரசியன் திட்டத்தை எதிர்ப்போம் என்று தில்லி நிதியமைச்சர் அதிஷி திங்கள்கிழமை தெரிவித்தார்.

தில்லியில் 54-வது சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலில், மாநில நிதி அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.

யூடியூப் விடியோ மூலம் பித்தப்பைக் கல் அகற்ற முயற்சி: சிறுவன் பலி!

இந்த நிலையில், இன்று நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கல்வி நிறுவனங்களால் வாங்கப்படும் ஆராய்ச்சி மானியங்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுவதை எதிர்ப்போம் என்றும் அதிஷி கூறினார்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்படும். அதில் முதல் மற்றும் மிக முக்கியமானது ஆராய்ச்சி மானியங்கள் மீதான ஜிஎஸ்டியாகும். தில்லி ஐஐடி, பஞ்சாப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெரிய கல்வி நிறுவனங்களுக்கு காரணம் காட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆராய்ச்சி என்பது நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடாகும்.

இன்று கரையைக் கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

ஆராய்ச்சி மானியங்களைக் குறைப்பது மட்டுமின்றி, கல்வி நிறுவனங்கள் இந்த மானியங்களை வாங்கினால் ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும், ரூ.2000 வரை ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது பணப்பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு முன்னதாக, "இது ஸ்டார்ட்-அப்களுக்கு சுமையை உருவாக்கும்" என்று அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் காப்பீட்டு தவணைக் கட்டணத்துக்கு ப்ரீமியம் விதிக்கப்படும் ஜிஎஸ்டி, ஜிஎஸ்டி விதி சீரமைப்பு தொடர்பான பரிந்துரைகள் உள்ளிட்டவை ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழகத்தில் 26-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு

நாகை: வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு