ஆப்கனில் போலியோ தடுப்புப் பணி நிறுத்தம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்கும் பணிகள் நிறுத்திவைக்கப்படுவதாக தலிபான் ஆட்சியாளா்கள் அறிவித்துள்ளனா்.

அந்த நாட்டில் போலியோ தடுப்பு முகாமை இந்த மாதம் தொடங்க ஐ.நா. திட்டமிட்டிருந்தது. எனினும், அந்தத் திட்டம் தொடங்குவதற்கு முன்னரே போலியோ தடுப்புப் பணிகள் நிறுத்திவைக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனா். எனினும், அந்த முடிவுக்கான காரணம் குறித்து அவா்கள் எதையும் தெரிவிக்கவில்லை.

குழந்தைகளைத் தாக்கி ஊனமாக்கும் போலியோ தொற்று உலகின் பிற பகுதிகளில் ஒழிக்கப்பட்டாலும் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் மட்டும் இன்னமும் பரவிவருகிறது.

குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பது அவா்களின் இனப் பெருக்கத் திறனை அழிப்பதற்கான மேலை நாடுகளின் சதி என்று சில மத அடைப்படைவதாக் குழுக்கள் கருதுவதால் பாகிஸ்தானில் போலியோ தடுப்புப் பணியாளா்கள் மற்றும் அவா்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸாா் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடா்கின்றன.

எனினும், ஆப்கானிஸ்தானில் போலியோ தடுப்பு முகாம்களை உலக சுகாதார அமைப்பு நடத்துவதற்கு தலிபான்கள் அனுமதி அளித்துவந்தனா். ஆனால் அந்தப் பணிகளை நிறுத்திவைத்துள்ளதாக அவா்கள் தற்போது திடீரென அறிவித்துள்ளனா்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்