ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் 5.1 ஆக பதிவு

காபுல்,

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் இன்று காலை 8.47 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள லக்மன் மாகாணத்தின் தலைநகரான மெஹ்தர்லாமுக்கு வடகிழக்கே 33 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 35 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

விழுப்புரம்- திருச்சி பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை குற்றப் பரம்பரையாக சித்தரிப்பதா? நடிகை கஸ்தூரிக்கு ஆ.ராசா கண்டனம்

‘2கே லவ் ஸ்டோரி’ படத்தின் டீசர் குறித்த அப்டேட்