ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரிலிருந்து வங்கதேச மூத்த வீரர் விலகல்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து வங்கதேச அணியின் மூத்த வீரர் முஷ்ஃபிகர் ரஹிம் கை விரல் எலும்பு முறிவு காரணமாக விலகியுள்ளார்.

வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (நவம்பர் 9) நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க: முகமது ரிஸ்வானுக்கு சிறிது அவகாசம் கொடுக்க வேண்டும்: ரிக்கி பாண்டிங்

முஷ்ஃபிகர் ரஹிம் விலகல்

ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (நவம்பர் 9) நடைபெறவுள்ள நிலையில், கை விரல் முறிவு காரணமாக வங்கதேச அணியின் மூத்த வீரர் முஷ்ஃபிகர் ரஹிம் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.

முஷ்ஃபிகர் ரஹிம் (கோப்புப் படம்)

இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின்போது, வங்கதேச வீரர் முஷ்ஃபிகர் ரஹிமின் இடது கையின் ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. எக்ஸ்-ரேவில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. அவர் குணமடைந்து வருவதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முதல்வர் மருந்தகம் அமைக்க வாய்ப்பு: எவ்வாறு விண்ணப்பிப்பது? வெளியான அறிவிப்பு!

ஜெய்சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய ஆஸி., ஊடகத்திற்கு கனடா தடை: இந்தியா கண்டனம்

India raids offices of sellers using Amazon, Flipkart platforms, sources say