ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு தலிபான்கள் பிறப்பித்த புதிய உத்தரவு

ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சி வந்த பிறகு, பெண்களுக்கு எதிராக கடுமையான பல விதிமுறைகள் உருவாக்கப்பட்ட நிலையில், பெண்கள் முன்னிலையில், ஒரு பெண் சப்தமாக தொழுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தலிபான் அமைச்சர் வெளியிட்டிருக்கும் ஆடியோ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல் பின்னணியில் அமித் ஷா? கனடா கசியவிட்ட தகவல்!

பெண்கள் இருக்கும் இடத்தில், ஒரு பெண் தொழுகை நடத்தும்போது, நமது குரலை மற்ற பெண்கள் கேட்கும் வகையில் சப்தமாக குரானை ஓதக்கூடாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில், பெண்கள் தக்பிர் செய்யவே அனுமதிக்கப்படாத நிலையில், அவர்கள் பிறகு எப்படி பாடுவதற்கு அனுமதிக்கப்படுவார் என்று அமைச்சரின் பதிவை குறிப்பிட்டு நேஷனல் போஸ்ட் கருத்துப் பகிர்ந்துள்ளது.

அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்தில், பெண்களின் குரலும் பாதுகாக்கப்பட வேண்டியதுதான் எனவே அதனை வெளியாள்கள் கேட்பதற்கு அனுமதிக்கக் கூடாது, வெளியாள்கள் மட்டுமல்ல, வெளி பெண்களும் கூட என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சி வந்த பிறகு, பள்ளிச் செல்வது முதல் பெண்களுக்கு பல்வேறு தடைகளை பிறப்பித்து, ஐ.நா.வின் கடுமையான கண்டனங்களைப் பெற்றுள்ளது. ஆனாலும், தொடர்ந்து பெண்களுக்கு எந்தவிதமான தடைகளை பிறப்பிக்கலாம் என்று சிந்தித்து அடுத்தடுத்த விதிமுறைகள் வெளியாகிக்கொண்டுதானிருக்கின்றன.

Related posts

அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 90 மி.மீ மழை!

இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமுக்கு திருமணம்!

சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றம்!