ஆப்கானிஸ்தான் 169 ரன்களுக்கு ஆல் அவுட்: தெ.ஆப்பிரிக்கா அசத்தல் பந்துவீச்சு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநால் போட்டியில் ஆப்கானிஸ்தான் 169 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஷார்ஜாவில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷாஹிடி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இந்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் அப்துல் மாலிக் இருவரும் களமிறங்கினர்.

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்று இந்தியா வரலாற்று சாதனை!

அப்துல் மாலிக் 9 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றமளித்தார். ஒருபுறம் அதிரடியாக அணியின் ஸ்கோரை உயர்த்திய ரஹ்மானுல்லா குர்பாஸ் தென்னாப்பிரிக்க வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவருக்கு பின்னர் வந்த யாரும் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

மற்ற வீரர்கள் யாரும் சரியாக சோபிக்காததால் அணியின் ஸ்கோர் மெதுவாக ஏறியது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குர்பாஸ் 89 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதில் 4 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளும் அடங்கும்.

செஸ் ஒலிம்பியாட்: மகளிர் பிரிவிலும் இந்தியா தங்கம் வென்றது!

கேப்டன் ஷாகிடி 10 ரன்னிலும், ரஹமத் ஷா 1 ரன்னிலும், ஒமர்சாய் 2 ரன்னிலும், இக்ரம் அலி 4 ரன்னிலும், நபி 5 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேற 9-வது விக்கெட்டாக களமிறங்கிய அல்லா கஸன்ஃபார் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் விளாசி வெளியேறினார். இது அணியின் ஸ்கோர் 150-ஐ கடக்க உதவியாக அமைந்தது.

34 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 169 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்: பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்!

தென்னாப்பிரிக்க அணித் தரப்பில் இங்கிடி, பீட்டர், பெலுக்வாயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 106 ரன்களுக்குள் சுருட்டி ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 177 ரன்கள் வித்தியாசத்திலும் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஈரான் நிலக்கரி சுரங்க வெடிவிபத்து: பலி 51 ஆக உயர்வு!

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!