ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சிபிஐ விசாரணை தேவை: மத்திய அமைச்சர்

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சிபிஐ விசாரணை தேவை: மத்திய அமைச்சர்ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என்று மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே தெரிவித்துள்ளார்.ராம்தாஸ் அதாவலே.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என்று மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே ஆறுதல் தெரிவித்தார். மேலும், ஆம்ஸ்ட்ராங் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியை சந்தித்தப் பின் செய்தியாளர்களுடன் பேசிய மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு பரிந்துரைக்கக் கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், மத்திய உள்துறை அமைச்சரை வலியுறுத்துவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ஆம் தேதி சென்னை பெரம்பூா் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பொன்னை பாலு, குன்றத்தூரைச் சோ்ந்த திருவேங்கடம் உள்பட 11 போ் கைது செய்யப்பட்டனா்.

எழும்பூா் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 11-ஆம் தேதி முதல் 11 பேரிடமும் போலீஸாா் விசாரணை செய்தனா். இதில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற அழைத்துச் சென்றபோது, தப்பியோடியதாக கடந்த 14-ஆம் தேதி திருவேங்கடம் என்கவுன்டா் மூலம் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

விசாரணை முடிந்து எஞ்சிய 10 பேரும் எழும்பூா் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை ஜூலை 19-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி தயாளன் உத்தரவிட்டாா்.

Related posts

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி; சித்தராமையா பதவி விலகலா…? டி.கே. சிவக்குமார் பதில்

6 வயது சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்த தலைமை ஆசிரியர் கைது

திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் ? தேவஸ்தானம் மறுப்பு