ஆம்ஸ்ட்ராங் கொலை: நாகேந்திரனுக்கு 3 நாள் போலீஸ் காவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை: நாகேந்திரனுக்கு 3 நாள் போலீஸ் காவல்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் வட சென்னையைச் சேர்ந்த ரவுடி நாகேந்திரனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்றுஅவர் எழும்பூர் 5-வது நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீசன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தனிப்படை போலீஸார், நாகேந்திரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரினர்.

அப்போது நாகேந்திரன், “நானும், கொலையான ஆம்ஸ்ட்ராங்கும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் விரோதம் இருந்ததில்லை. அரசியல் காரணங்களுக்காக என்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளனர்” என அழுதபடி நீதிபதியிடம் முறையிட்டார்.

விசாரணைக்குப் பின்பு, நாகேந்திரனை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, எழும்பூரில் உள்ள ரவுடிகள் தனிப்பிரிவு அலுவலகத்தில் வைத்து நாகேந்திரனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

‘சாதி பிரிவினை மூலம் தேசபக்தியை அழிக்க காங்கிரஸ் நினைக்கிறது’ – பிரதமர் மோடி

பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த நிதிஷ் குமார்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு