ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தேவை: தமிழிசைஅரசியல் தலைவர்களின் கொலைகள் அதிகரிப்பு: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிபிஐ விசாரணை தேவை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என்று பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு அவர் அளித்த பேட்டியில், பிஎஸ்பி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இழப்பை யாராலும் நிரப்ப முடியாது. ஆம்ஸ்ட்ராங்கிற்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் கொலைகள் அதிகரித்துள்ளன.பல அராஜகத்திற்கும், குற்றச்செயல்கள் நடைபெறும் இடமாக வட சென்னை மாறிக்கொண்டு இருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். நெல்லை காங்கிரஸ் நிர்வாகி கொலையில் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் பின்புலம் உள்ளது. தமிழகத்தில் போலி சரக்கு, போலி சரண்டர்கள் அதிகரித்துள்ளன. ஆம்ஸ்ட்ராங்கின் இழப்பு சிந்தித்துகூட பார்க்க முடியாத ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பொத்தூரில் அடக்கம் செய்ய உறவினர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரின் இறுதி ஊர்வலம் மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.