ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – அதிமுக கவுன்சிலர் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – அதிமுக கவுன்சிலர் கைது
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)

ஏற்கெனவே கைதான அருளின் கைப்பேசி ஹரிதரனிடம் இருந்ததால் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைதான ஹரிதரன் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலராக உள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இதுவரை 16 பேர் கைதானதில் திருவேங்கடம் என்கவுன்ட்ர் செய்யப்பட்டார்.

இதனிடையே கொலைக்கு பயன்படுத்திய கைப்பேசிகள் திருவள்ளூர் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. கூவம் ஆற்றில் வீசப்பட்ட 5 கைப்பேசிகளை ஸ்கூபா வீரர்கள் மூலம் காவல்துறையினர் மீட்டனர்.

ஹரிஹரன் தந்த தகவலின்படி கூவம் ஆற்றில் வீசப்பட்ட கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 5-ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் பெரம்பூா் வேணுகோபால் சாமி கோயில் தெருவில் உள்ள தனது வீட்டின் முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்தக் கொலை தொடா்பாக பொன்னை பாலு, குன்றத்தூரைச் சோ்ந்த திருவேங்கடம், பூந்தமல்லியைச் சோ்ந்த வழக்குரைஞா் அருள் உள்பட கைது செய்யப்பட்டனா்.

கொலைக்கு பிரபல ரெளடியான ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது.

கடந்தாண்டு ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாகவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக பொன்னை பாலு விசாரணையில் தெரிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்