ஆயிரக்கணக்கான கோடியில் ஹிண்டன்பர்க் லாபம் பார்க்கிறது- அண்ணாமலை

பங்குச்சந்தையில் ஆயிரக்கணக்கான கோடியில் ஹிண்டன்பெர்க் லாபம் பார்க்கிறது என அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

திருப்பூர்,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதலீட்டாளர்களை பீதியில் ஆழ்த்தும் வகையில், செய்தியை வெளியிட்டு பங்குச்சந்தையில் ஆயிரக்கணக்கான கோடியில் ஹிண்டன்பர்க் லாபம் பார்க்கிறது- ஒரு பங்கு விலை இறங்குவதை முன்கூட்டியே கணித்து அதனை விற்று லாபம் பார்க்கிறது இந்த நிறுவனம். உலகளவில் முக்கிய நிறுவனங்களை குறிவைத்து பல கோடி சம்பாதிப்பதே ஹிண்டன்பர்க் நோக்கம்.

செபி தலைவர் குறித்து ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும். செபி நோட்டீஸ் கொடுத்ததற்காக அந்த நிறுவனம் மீண்டும் குற்றச்சாட்டை முன்வைக்கிறது. ஹிண்டன்பர்க் போன்ற நிறுவனங்கள் நமக்கு பாடம் எடுக்க வேண்டாம்" இவ்வாறு கூறினார்.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி