சிவகங்கையில், 2 கொலை வழக்குகளில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட நபர் போலீஸ் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது ரயில் தண்டவாளத்தில் வழக்கி விழுந்ததாக கூறி கால் மற்றும் கையில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.
தீபாவளியன்று, வானியங்குடியில் மணிகண்டன் என்கிற பைனான்சியரும், அடுத்த நாளில் களத்தூரில் லெட்சுமி என்பவரும் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கீழக்குளத்தைச் சேர்ந்த தவம் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
இவ் வழக்கில் கைது செய்யப்பட்ட தவத்தின் மீது ஏற்கனவே மூன்று கொலை வழக்குகள் உட்பட ஏராளமான வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.