ஆயுத பூஜை: தமிழகம் முழுவதும் களைகட்டும் கொண்டாட்டம்

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜைகளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முன்னேற்பாடுகளும், கொண்டாட்டங்களும் களைகட்டியிருக்கின்றன.

வீடு, அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் ஆயுதபூஜை கொண்டாட தேவையான பொருட்கள் விற்பனை படுஜோராக நடைபெற்றுவ ருகிறது. பூஜைக்கு ஏற்ற பொருள்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதால் முக்கிய சந்தைப் பகுதிகளில் விழாக்கோலம் பூண்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு தனியார் அலுவலகங்களில் இன்றே ஆயுதபூஜை கொண்டாடப்படுவதை முன்னிட்டு அலுவலகங்களில் அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டு, ஊழியர்களுக்கு போட்டிகள் வைத்து, பரிசுகள் வழங்கப்படுகின்றன.

பலரும் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்குப் படையெடுத்திருக்கிறார்கள். இதனால், தனியார் பேருந்துக் கட்டணம் விமானக் கட்டணம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

தமிழகத்தில் முக்கிய மாவட்டங்களில் உள்ள புகழ்பெற்ற சந்தைகளில் இன்று ஏராளமான மக்கள் வந்து பூஜை பொருள்களை வாங்கிச் செல்வதால் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகள் களைகட்டியிருக்கின்றன.

வேலூர் லாங் பஜாரில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு அலங்காரப் பொருட்கள்,பழங்கள்,பூ போன்றவற்றை வாங்குவதற்காக பொதுமக்கள் மிகவும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழைக்கன்றுகள் வாழைமரம். பூசணிக்காய். பூக்கள் எடுத்து வந்து வேலூர் முக்கிய பகுதிகளில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர் அதை மக்கள் தங்களுடைய பூஜைக்கான பொருட்களாக ஆர்வத்துடன் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

Related posts

ஒடிசா: வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை-மகள் பாம்பு கடித்து பலி

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக