ஆயுத பூஜை முன்னிட்டு 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு!

சென்னை: ஆயுத பூஜை பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை முன்னிட்டு 09 மற்றும் 10 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை இன்று அறித்துள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், கன்னியாகுமாரி, தூத்துக்குடி, கோயம்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 09 மற்றும் 10ஆம் தேதிகளில் 1105 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 18,000 பேருக்கு அபராதம்!

திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூருக்கு 09 மற்றும் 10 ஆகிய நாட்களில் 300 பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்பத்தூர் ஆகிய இடங்களிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களுக்கு செல்பவர்களுக்கு 09 மற்றும் 10ஆம் தேதிகளில் 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நீண்ட தூரம் செல்லக்கூடியவர்கள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டால் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்று அறிவுருத்தப்பட்டுள்ளது.

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்