“ஆயுள், மருத்துவக் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டியை திரும்பப் பெறுக”

ஆயுள், மருத்துவக் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டியை திரும்பப் பெறுக – நிதியமைச்சருக்கு கட்கரி கடிதம்

கட்கரி

ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டியை திரும்பப்பெறக் கோரி மத்திய நிதியமைச்சர் அமைச்சருக்கு , நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எழுதி உள்ள கடிதத்தில், நாக்பூரைச் சேர்ந்த காப்பீட்டுத்துறை ஊழியர் சங்கத்தினர் தம்மை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளதாகவும், ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக்காப்பீட்டுக்கு 18விழுக்காடு ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடுகள் சமூகத்தின் அடிப்படை தேவை என அந்த சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளதாக கட்கரி குறிப்பிட்டுள்ளார். மூத்த குடிமக்களின் நலன் கருதி காப்பீடுகள் மீதான ஜிஎஸ்டியை திரும்பப்பெற பரிசீலிக்க வேண்டும் என்று நிதின் கட்கரி தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

விளம்பரம்

வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மை எனும் அபாயத்தை உணர்ந்த ஒரு நபர் தனது குடும்பத்திற்கு சில பாதுகாப்பை வழங்குவதற்காக எடுக்கும் காப்பீடுக்கான பிரீமியத்திற்கு வரி விதிக்கப்படக்கூடாது என ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் கருதுவதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்தின் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி, சமூகத்துக்கு அவசியமான இந்த பிரிவின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்றும்,

இதையும் படிங்க: “எனக்கு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள்” – அதிர்ச்சியை கிளப்பிய டெலிகிராம் நிறுவனர்!விளம்பரம்

உடல்நல காப்பீட்டு பிரீமியங்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் சங்கம் கோரிக்கை வைத்துள்ளதாக நிதின் கட்கரி

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
FINANCE MINISTER NIRMALA SITHARAMAN
,
Nitin Gadkari

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்