ஆர்டர் செய்தால் Side Dish மட்டுமல்ல, மதுபானமே இனி வீட்டுக்கு வரும்

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் Side Dish மட்டுமல்ல, மதுபானமே இனி வீட்டுக்கு வரும்!

ஆன்லைன் மதுபானம்

ஒடிசா மற்றும் மேற்கு வங்க அரசுகள் ஆன்லைனில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்துள்ளன.

ஒரு காலத்தில் சில ஹோட்டல்கள் மட்டுமே வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்யும் சேவையை வழங்கி வந்தன. மொபைல் சேவைகள் வளர்ச்சியடைந்த நிலையில், Swiggy, Zomato போன்ற நிறுவனங்கள் அனைத்து வகையான ஹோட்டல்களின் உணவுகளையும் வீடுகளுக்கே டெலிவரி செய்து வருகின்றன.

இந்த நிலையில், உணவோடு, மதுபானத்தையும் டெலிவரி செய்யும் பணியை இந்நிறுவனங்கள் 2020- ஆம் ஆண்டில் தொடங்கின. மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிஷா, மேற்குவங்கம் மற்றும் அசாமில் அப்போது வழங்கப்பட்ட இந்த ஆன்லைன் மதுபான டெலிவரி சேவை பின்னாளில் நிறுத்தப்பட்டது.

விளம்பரம்

எனினும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சியில் வீடு தேடி மதுபானம் டெலிவரி செய்யும் உரிமையை ஸ்விக்கி பெற்றது. அதேபோன்று Zomato, நிறுவனம் ராஞ்சி மட்டுமின்றி அம்மாநிலத்திற்கு உட்பட்ட 7 நகரங்களில் இந்த சேவையை விரிவுபடுத்த முடிவெடுத்துள்ளது.

இதேபோல, நாட்டின் பிற மாநிலங்களுக்கும் இந்த சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்ட Swiggy மற்றும் Zomato நிறுவனங்கள் அதற்கான ஒப்புதலுக்காக 10 மாநில அரசுகளிடம் அனுமதி கோரி விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக ஒடிஷா மற்றும் மேற்குவங்க அரசுகள் இதற்கான அனுமதியை வழங்கியிருப்பதாக தெரிகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க:
டிடிஎஃப் வாசன் நேரில் ஆஜராக வேண்டும் – ஆந்திர காவல்துறையினர் கிடுக்கிப்பிடி!

ஆனால், தமிழ்நாட்டு அரசு இதற்கான ஒப்புதலை வழங்கவில்லை என தெரிகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Swiggy
,
Zomato

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்