ஆற்று கால்வாயில் 125 கிலோ எடையுள்ள மீனை பிடித்த மீனவர்கள்

ஆற்று கால்வாயில் 125 கிலோ எடையுள்ள மீனை பிடித்த மீனவர்கள்.. பொதுமக்கள் ஆச்சரியம்

பீகாரில் பிடிபட்ட 125 கிலோ மீன்

பீகார் மாநிலம் மதுபானியை சேர்ந்த இரண்டு மீனவர்கள் சுமார் 125 கிலோ எடையுள்ள மீனைப் பிடித்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுபானியைச் சேர்ந்த ஹரிகிஷோர் சாஹ்னி மற்றும் சுதன் சாஹ்னி என்ற இரண்டு மீனவர்கள் தான் இந்த பெரிய சைஸ் மீனை பிடித்துள்ளனர்.

உள்ளூர் அறிக்கையின் படி, ஹரி கிஷோரும், சுதனும் மீன் பிடிப்பதற்காக மதுபானியின் ஜாஞ்சர்பூரில் உள்ள ஒரு ஆற்றுக் கால்வாய்க்கு வந்துள்ளனர். அவர்கள் இருவரும் தங்கள் வலைகளை வீசுவதற்கு முன்பு, ஆற்றில் ஒரு பெரிய உயிரினம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெரிய உயிரினத்தை பிடிக்க உதவுவதற்காக ஹரிகிஷோரும், சுதனும் கால்வாயில் இருந்த மற்ற மீனவர்களை அழைத்தனர்.

விளம்பரம்

இதனையடுத்து அவர்களுக்கு உதவுவதற்காக கால்வாயில் இருந்த மற்ற மீனவர்களும் ஆற்றில் குதித்து அவற்றை தேட ஆரம்பித்தனர். தேடுதல் முயற்சியின்போது, அவர்கள் தண்ணீரில் ஒரு பெரிய உயிரினம் இருப்பதை உணர்ந்தனர் மற்றும் தேடுதல் முயற்சிகளை தீவிரப்படுத்த இன்னும் சில மீனவர்களை அழைத்தனர். அப்போது மதுபானியைச் சேர்ந்த இருவருக்குமே 125 கிலோ எடையுள்ள மீன் பிடிக்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது.

மீனவர் சுதன், இந்த மீனைப் பார்த்து திகைத்து, மீனைக் கட்டுப்படுத்த சுமார் 10 மீனவர்கள் தேவைப்படுவார்கள் என்று கூறினார். அதன் பின்னரே அந்த மீன் வலையில் சிக்கியது. கரைக்கு வந்ததும் வலையில் சிக்கிய மீனை, மீனவர்கள் எடைபோட்டு பார்த்தபோது சுமார் 125 கிலோ எடை இருந்தது தெரியவந்தது.

விளம்பரம்

இதனையடுத்து இந்த மீன் இப்போது சுதனின் குளியல் தொட்டியில் கவனமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. நகரம் முழுவதும் பரவிய இந்த செய்தியை கேள்விப்பட்ட உள்ளூர்வாசிகள், மீனை பார்க்க ஆர்வமாக விரைந்தனர். தகவல் அறிந்ததும் ஊர் மக்கள் அனைவரும் ஆற்றை நோக்கி ஓடினர். இந்த அபாரமான மீனைக் காண அப்பகுதி மக்களுடன், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்களும் ஆற்றுக் கால்வாயில் ஏராளமானோர் குவிந்தனர்.

இதையும் படிக்க:
கொத்து கொத்துக்காக சடலங்கள், எலும்புக்கூடுகள்.. குப்பை மேடாக மாறிய எவரெஸ்ட் சிகரம்!

விளம்பரம்

உற்சாகத்தின் மத்தியில், மக்கள் மீனின் மதிப்பைப் பற்றி ஊகிக்கத் தொடங்கினர், பலர் அதன் மதிப்பு குறித்து ஆராயவும், ஏலங்களை முன்மொழியவும் முயன்றனர். இருப்பினும், அந்த இரண்டு மீனவர்கள் தாங்கள் பிடித்த பெரிய சைஸ் மீனை ஏலத்தில் விட மறுப்பு தெரிவித்து விட்டனர். சிலர் இதை ‘நதியின் பெரிய மீன்’ என்று குறிப்பிடுகின்றனர், மற்றவர்கள் ஒரு வெளிநாட்டு இனத்தைச் சேர்ந்த மீனாக இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றனர். அத்தகைய இனங்கள் நதியின் ஓட்டத்தின் வழியாக மதுபானி ஆற்றின் கால்வாயில் நுழைந்திருக்கலாம் என்று நம்புவதாக கூறியுள்ளனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Bihar
,
Fish
,
Fisher man

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்