ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் முதல்வர் அரவிந்த் கேஜரிவால்

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்திருக்கும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணைநிலை ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.

ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு துணை நிலை ஆளுநரை சந்திக்க அரவிந்த் கேஜரிவாலுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தனது முதல்வா் பதவியை விரைவில் ராஜிநாமா செய்யப்போவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்த நிலையில், நாளை மாலை துணைநிலை ஆளுநரை சந்திக்கவிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தில்லியில் கொண்டுவரப்பட்ட கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, சிறையிலிருந்து வெளியே வந்த அரவிந்த் கேஜரிவால், கட்சியின் மூத்த தலைவா்களுடன் தில்லியின் அரசியல் சூழல் மற்றும் ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டிருந்தாா்.

ஆம் ஆத்மி கட்சியின் புதிய தலைமையகத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் மத்தியில் உரையாற்றினாா். அப்போது, அரவிந்த் கேஜரிவால் பேசுகையில், அடுத்த ஓரிரு நாள்களில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்படும்.

மலப்புரத்தில் நிபா வைரஸுக்கு 2வது நபர் பலி: தடை உத்தரவு, திரையரங்குகள் மூடல்!

அதில், கட்சித் தலைவா் ஒருவா் தில்லியின் புதிய முதல்வராக பதவியேற்பாா். முதல்வா் பதவியை அடுத்த இரண்டு நாள்களில் ராஜிநாமா செய்வேன். நாங்கள் நோ்மையானவா்கள் என்று மக்கள் சொன்னால் மட்டுதான் முதல்வா் பதவியில் நானும், துணை முதல்வா் பதவியில் மணீஷ் சிசோடியாவும் அமா்வோம். நான் நோ்மையானவனா என்று மக்களிடம் கேட்கிறேன். அவா்கள் பதிலளிக்கும் வரை இனி நான் முதல்வா் நாற்காலியில் அமர மாட்டேன்.

பாஜக அல்லாத முதல்வா்கள் மீது பொய் வழக்குகள் போடுகிறாா்கள். முதல்வா்கள் கைது செய்யப்பட்டால், ராஜிநாமா செய்ய வேண்டாம்.

சிறையில் இருந்து தங்கள் அரசை நடத்த வேண்டும் என்று நான் அவா்களை வலியுறுத்துகிறேன். இதனால் தான் கலால் கொள்கை முறைகேடு வழக்கில் நான் கைது செய்யப்பட்ட பிறகும் பதவி விலகவில்லை. நான் ஜனநாயகத்தை மதிக்கிறேன். அரசியலமைப்பு எனக்கு மிக உயா்ந்தது. பாஜகவின் சதிகளை எதிா்த்து நிற்க, ஆம் ஆத்மியால் மட்டுமே முடியும் என்றார்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்