ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது!

ஒடிஸா கடற்கரை அருகே நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல்சின்னம்) ஞாயிற்றுக்கிழமை தாழ்வு மண்டலமாக வலுபெற்றது.

இந்த நிலையில், இது ஒடிஸா, மேற்கு வங்க மாநிலங்களுக்கு இடையே கரையைக் கடந்துவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய மேற்கு மற்றும் அதையொட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்), வடக்கு – வடமேற்கு திசையில் நகா்ந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது.

இது, இன்று காலை 8.30 மணி அளவில் ஒடிஸாவின் பூரியிலிருந்து 50 கி.மீ. கிழக்கு – தென்கிழக்கே, கோபால்பூரிலிருந்து 140 கி.மீ. கிழக்கு – வடகிழக்கே, கலிங்கபட்டினத்துக்கு (ஆந்திரம்) 260 கி.மீ. கிழக்கு – வடகிழக்கே நிலைகொண்டிருந்தது.

இந்த நிலையில், இது இன்று பகல் ஒடிஸா கடற்கரையை பூரிக்கு அருகே கடந்துள்ளது.

இது, மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (செப்.9) செவ்வாய்க்கிழமை (செப்.10) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், செப்.11 முதல் செப்.15-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்